search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறுவை சாகுபடி"

    • மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும்.
    • காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர்.

    பூதலூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் இன்று இரவு கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். கல்லணையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் பயன்பெறும். இந்த மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும். இது தவிர சம்பா, தாளடியையும் சேர்த்தால் சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இந்த ஆண்டு பிரதான கால்வாய்கள் மட்டுமல்லாமல் சிறிய கிளை கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளதால் விரைவில் கடைமடைக்கு தண்ணீர் சென்று சேரும் என்றும், பிரதான வாய்க்கால்களில் இருந்து கிளை வாய்க்கால்களில் தண்ணீர் விரைவாக சென்று வயல்களில் பாய்ந்து குறுவை சாகுபடி சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம் ஆகியவை போதுமான அளவிற்கு இருப்பில் உள்ளதாக வேளாண்மை துறை தெரிவித்துள்ளன. தனியார் நிறுவனங்களிலும் விதை நெல் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    நாளை கல்லணையில் தண்ணீர் திறக்கப்படுவதை ஒட்டி கல்லணை பாலங்களில் தோரணங்கள் கட்டப்பட்டு காணப்படுகிறது. கல்லணை பாலங்களில் மேல் அமைந்துள்ள மாமன்னன் கரிகாலன், ராஜராஜ சோழன், காவேரி அம்மன், அகத்தியர், ஆர்தர் காட்டன் ஆகிய சிலையில் புது வண்ணம் பூசப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன .

    நாளை காலை மேளதாளங்கள் முழங்க முதலில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடைபெறும் . அதனை தொடர்ந்து கல்லணை பூங்காவில் உள்ள ஆதி விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அதன்பின்னர் முதலில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக இடத்திலிருந்து முக்கிய பிரமுகர்கள் பொத்தானை அமுக்கி தண்ணீரை திறந்து விடுவார்கள்.

    திறந்து விடப்படும் தண்ணீரில் மலர்களையும் விதை நூல்களையும் தூவுவார்கள். காவிரியை தொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்படும் . நிறைவாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் . கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    கல்லணை திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பாசனப்பகுதியில் குறுவை சாகுபடிப்பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. அதே சமயத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கினால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து காவிரி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக நிம்மதியாக செய்யவும் வழிகிடைக்கும் என்று நம்புகின்றனர். எப்படியாக இருந்தாலும் விவசாயிகள் நம்பிக்கையோடு சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அரசு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளைத் திறந்து வைக்கிறார்.
    • குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    சேலம்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு வருகிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரடுக்கு பஸ் நிலையமாக கட்டி முடிக்கப்பட்டு உள்ள சேலம், பழைய பேருந்து நிலையத்தினை அவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கிறார்.

    மேலும், சேலம் கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    இந்நிகழ்ச்சியில் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம், அரசு சட்டக்கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டம், சீர்மிகு நகரத் திட்டம், மறு சீரமைப்புப் பணிகள், பள்ளப்பட்டி ஏரி புனரமைக்கும் பணிகள் மற்றும் புதிய பாலப் பணிகள் உட்பட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளைத் திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து 12-ந்தேதி காலையில் காவிரி டெல்டா பகுதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டத்துக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்க சேலம் மாவட்ட தி.மு.க. வினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    • மேட்டூர் அணையில் ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டால், 15-ஆம் நாள் கல்லணைக்கு தண்ணீர் வந்து விடும்.
    • குறுவை சாகுபடி உழவர்களுக்கு லாபமாக அமைவது உறுதி செய்யப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மேட்டூர் அணையில் ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டால், 15-ஆம் நாள் கல்லணைக்கு தண்ணீர் வந்து விடும். கல்லணையிலிருந்து ஜூன் 15 அல்லது 16-ஆம் நாள் காவிரி பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படக் கூடும். அதற்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் தூர் வாரும் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மையான பகுதிகளில் இன்னும் பாதியளவு பணிகள் கூட நிறைவடையவில்லை. இதே வேகத்தில் பணிகள் நடைபெற்றால், கல்லணை திறப்பதற்கு முன்பாக தூர்வாரும் பணிகள் நிறைவடையாது.

    மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஏறக்குறைய 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.75 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 1.50 லட்சம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.25 லட்சம் ஏக்கர், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் என நான்கு மாவட்டங்களில் மட்டும் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.

    காவிரி பாசன மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த சிக்கலில் நீர்வளத்துறை அமைச்சர் தலையிட்டு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மற்றொருபுறம், காவிரி பாசன மாவட்டங்களில் வேளாண்துறை மூலம் விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். கூட்டுறவுத்துறை மூலம் உழவர்களுக்கு குறுகிய கால கடன்கள் தடையின்றி கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் குறுவை சாகுபடி உழவர்களுக்கு லாபமாக அமைவது உறுதி செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அணையின் 90ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • குறித்த நாளான ஜூன் 12-ல் இதுவரை 18ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது.

    இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நீரை நம்பியே குறுவை சாகுபடி செய்வர்.

    கடந்த ஆண்டு மழையால் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் ஜூன் 12-ந்தேதிக்கு முன்பாகவே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மே மாதம் 24-ந்தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்துவிட்டார்.

    மேட்டூர் அணை வரலாற்றிலேயே, கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிகழ்வு முதல் முறையாக நிகழ்ந்தது.

    இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12-ந்தேதி டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.

    குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 4 லட்சத்து 91ஆயிரத்து 200 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். ஜூன் 12-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை குறுவை, சம்பா, காளடி பயிர்களுக்கு 220 நாட்களுக்கு 372டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் இந்த நீரின் தேவை சற்று குறையும்.

    மேட்டூர் அணையின் உச்ச நீர் மட்டம் 120 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 103.65 அடியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 69.654 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 1075 கன அடியாக உள்ளது.

    குடிநீருக்காக விநாடிக்கு 1508 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்கியுள்ளதால் ஜூன் 12-ம் தேதியே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

    அணையின் 90ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன்12-ல் இதுவரை 18ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன்12-க்கு முன்பாக 11ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் 19-வது முறையாக குறித்த நாளான ஜூன் 12-ம் தேதி, நடப்பாண்டும் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    டெல்டா பாசனப் பகுதியில் கடந்த ஆண்டு 58 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது இது 65,500 ஏக்கர் நிலப்பரப்பாக அதிகரித்துள்ளது. அதேபோல் 4.36 லட்சம் டன் உரம் கையிருப்பில் உள்ளது என்று வேளாண் அதிகாரிகள் கூறினர்.

    மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு இந்த தேதியில் இருந்த தண்ணீரை விட, தற்போது 6 டிஎம்சி வரை குறைவாகவே உள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

    • குருவை சாகுபடி பணி தொடங்கப்பட்டுள்ளது.
    • விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் ராமன் கோட்டகம் பகுதியில் குருவை சாகுபடி பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது உழவு பணி நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி தினக்கூலி விவசாயிகள், பெண்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    • குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விதை உரம், இடுபொருள்கள் வாங்க அதிகாரிகளிடம் கையொப்பம் வாங்க சென்றனர்.
    • சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்குவளைக்கு சென்று பெறவேண்டிய சூழ்நிலை இருந்து வருவதால் அவதியடைந்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தியில் பல லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. மேலும் தற்பொழுது குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விதை உரம் மற்றும் இடுபொருள்கள் மற்றும் அதிகாரிகளிடம் கையொப்பம் வாங்க இங்கிருந்த அலுவலகம் தற்போது மாற்றப்பட்டு சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்குவளைக்கு சென்று பெறவேண்டிய சூழ்நிலை இருந்து வருவதால் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து, அக்கட்டிடத்தை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாயிகளுக்கு முழுவதும் மானிய விலையில் ஒரு மூட்டை யூரியா (45 கிலோ), ஒரு மூட்டை டி.ஏ.பி (50 கிலோ) மற்றும் அரை மூட்டை பொட்டாஷ் (25 கிலோ) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.
    • இத்திட்டத்தின் மூலம் ஒரு விவசாயிக்கு வழங்கப்படும் அதிகப்பட்ச நிலவரம்பு ஒரு ஏக்கர் ஆகும்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக குறுவை தொகுப்பு திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முழுவதும் மானிய விலையில் ஒரு மூட்டை யூரியா (45 கிலோ), ஒரு மூட்டை டி ஏ.பி (50 கிலோ) மற்றும் அரை மூட்டை பொட்டாஷ் (25 கிலோ) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க ப்பட உள்ளது.

    இத்திட்ட த்தின்மூலம் ஒரு விவசா யிக்கு வழங்க ப்படும் அதிக ப்பட்ச நில வரம்பு ஒரு ஏக்கர் ஆகும்.இதில் சிறு குறு விவசா யிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் ஆதார்எண், சிட்டா அட ங்கல் மற்றும் போ ட்டோ ஆகிய விவர ங்க ளுடன் அவ ரவர் கிரா மங்க ளுக்கான உதவி வேளா ண்மை அலுவ லரை அணுகி உர மானியத்தி ற்கான பரிந்து ரை விண்ணப்ப த்தினை பெற்று க்கொ ள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • திருப்பழனம் ஓடம் போக்கி பாசன வாய்க்கால்கள் தலா 300 ஏக்கர் பரப்பளவுக்கு மேலான நஞ்சை விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன ஆதாரமாக விளங்குகிறது.
    • கல்லணைக்கு அருகில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றுக்கு அருகில் உள்ள பல பாசன வாய்க்கால்களை தண்ணீர் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவையாறு:

    திருவையாறு அருகே திருப்பழனம் ஊராட்சியில் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து கும்பகோணம் மெயின்ரோடின் குறுக்கே செல்லும் திங்களூர் முனியாண்டவன் கோவில் பாசன வாய்க்கால் மற்றும் திருப்பழனம் ஓடம் போக்கி பாசன வாய்க்கால்கள் தலா 300 ஏக்கர் பரப்பளவுக்கு மேலான நஞ்சை விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன ஆதாரமாக விளங்குகிறது.

    ஆனால் இந்த மெயின் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தண்ணீர் போகாதவாறு புதர் மண்டிக் கிடக்கிறது. மேலும் இப்பாசன வாய்க்கால்களிலிருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் உள்ளது. தற்போது குறுவை பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே குறுவை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2 நாட்களில் மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட கடைமடை பகுதிகளை காவிரிநீர் சென்றடைந்து விட்டது.

    ஆனால் கல்லணைக்கு அருகில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றுக்கு அருகில் உள்ள பல பாசன வாய்க்கால்களை தண்ணீர் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காவிரி ஆற்றுப் பாசன நீரை மட்டுமே நம்பி நெல் பயிர் செய்யும் விவசாயிகள் இந்த பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி குறுவை சாகுபடியை விரைவாக தொடங்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×